• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு..!!

ByA.Tamilselvan

Apr 24, 2023

நீட் தேர்வு முடிந்த பிறகு வெளியிடலாம் என்பதால்பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், நீட் தேர்வை எழுதும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், நீட் தேர்வு முடிந்த பிறகு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிடம் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்குப் பிறகு வெளியிடலாமா என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.