பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதாவை தமிழ்நாடு அரசு இன்றே திரும்பப் பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர், தற்போது மின்னணுவியல் ஐடி நிறுவனங்கள் காலணி ஆளை போன்ற நிறுவனங்கள் 12 மணி நேர வேலை முறையை எதிர்பார்க்கின்றன. இதன் மூலமாக உற்பத்தி மற்றும் முதலீடு அதிகரிக்கும் என்பதை கருதி இந்த புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த முறை எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது எனவும் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பொருந்தும் எனவும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் விரும்பினால் இந்த முறையை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் ஊழியர்களுக்கு விருப்பம் இல்லாமல் 12 மணி நேரம் வேலை வாங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும் இதற்கு பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதாவை தமிழ்நாடு அரசு இன்றே திரும்பப் பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.