• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஜாதிய மோதல் ஏற்பாடமல் முதல்வர் கண்காணிக்கவேண்டும்-ஜான் பாண்டியன் பேட்டி

ByKalamegam Viswanathan

Apr 23, 2023

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு:
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நீண்ட ஆண்டுகளான கோரிக்கை, விகிதாச்சார அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் குறித்த கேள்விக்கு:
குற்றவாளிகளை பிடிக்க மாட்டார்கள் என்று நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். இருபுறமும் இருந்து அவர்களுக்கு வாக்கு வேண்டும் அப்படி இருக்கும் போது எப்படி கைது செய்வார்கள். குற்றவாளி யார் என்று காவல்துறைக்கு தெரியும், அரசுக்கு தெரியும் அவர்களை கைது செய்யாமல் இருப்பதன் நோக்கம் வாக்கு வாங்க முடியாமல் போய்விடும் என்பதுதான்.
பட்டியல் இனத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு:
இது எங்களின் நீண்ட ஆண்டு கோரிக்கை பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர்கள் வெளியே செல்ல வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை அதன் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறேன். இன்று கூட மதுரையில் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். காலம் கனியும் போது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.
அதிமுக விரிசல் குறித்த கேள்விக்கு:
தேர்தல் ஆணையமே எடப்பாடி தான் என்று சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் பேச வேண்டியது எதுவும் இல்லை. தொண்டர்களின் குழப்பத்திற்கு அது காரணமாக இருக்காது இன்றைய சூழலில் பொதுக்குழு அடிப்படையில் எடப்பாடிக்கு தான் இரட்டை இலை சின்னம், அவருக்குத்தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
தொழிலாளர்கள் 12 மணி நேர வேலை குறித்த கேள்விக்கு:
தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தவறானது 8 மணி நேரம் வேலை செய்வதற்கே சிரமப்படுகிறார்கள் இதில் 12 மணி நேரம் வேலை ஒரு நாள் கூடுதல் விடுப்பு என்பது நல்ல முன்னுதாரணம் அல்ல அது தவறு. அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
திமுக ஆட்சியில் ஜாதி மோதல் இல்லை என்று முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு:
ஒரு வாரத்துக்கு முன்பு கூட பரமக்குடியில் ஜாதி கலவரம் நடைபெற்றது கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவனை ஆசிரியரும், மாணவரும் துன்புறுத்தி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. கடலாடி பள்ளியில் ஆசிரியரை தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறைய நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்தால் ஜாதி கலவரங்களை தவிர்க்க முடியும். ஜாதி கலவரத்தை முதலமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்றார்.