• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 11, 2023
  1. மோர்க்குடம் என்பது?
    இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
  2. வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?
    முதல் வேற்றுமை
  3. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
    ஐந்தாம் வேற்றுமை
  4. சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
    ரா.பி.சேதுப்பிள்ளை
  5. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
    மூன்று
  6. கவிப்பாவிற்குரிய ஓசை?
    துள்ளல்
  7. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
    கவிமணி
  8. உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்? ஒட்டக்கூத்தர்
  9. அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
    கண்ணதாசன்
  10. தேவாரம் பாடிய மூவர்?
    அப்பர், சம்பந்தர், சுந்தரர்