• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நீண்ட நாட்களுக்கு பிறகு சேலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பு; வணிக நிறுவனங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், சுகவனேஷ்வரர் கோவில், குழந்தை இயேசு பேராலயம், சிஎஸ்ஐ பேராலயம் மற்றும் ஜாமியா மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.