• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

ByKalamegam Viswanathan

Mar 22, 2023

திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை – சாலையில் இருபுறமும் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது .
மதுரை மாவட்டம் திருமங்கலம், கப்பலூர் , ஆலம்பட்டி , கரிசல்பட்டி, சிவரக்கோட்டை , கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை திடீரென பெய்த கனமழை , தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு மேலாக வெளுத்து வாங்கியது . இம்மழையினால் சாலையில் இருபுறமும் மழைநீர் வெள்ளம் என தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதுடன், போக்குவரத்தும் ஸ்தம்பித்தது