• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கடன்காரனாக இருக்கிறேன் -அண்ணாமலை பேச்சு

ByA.Tamilselvan

Mar 19, 2023

சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன் எனி பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது..கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை; கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி குறித்து பேசும் நேரம் விரைவில் வரும். தேர்தலை சந்திக்கும் விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது நல்லதுதான். எனது நிலைப்பாட்டில் 50 சதவீத பேருக்கு உடன்பாடும் 50 சதவீத பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது. பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சியடையும் நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.