• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பணத்தை திருடிசென்ற மர்ம நபர்- வீடியோ

ByKalamegam Viswanathan

Mar 19, 2023

மதுரையில் கண்ணாடி கடையின் முன்பக்க கதவை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிசென்ற மர்ம நபர் போலீசார் விசாரணை; CCTV காட்சிகள் வெளியீடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள அம்மன் சன்னதி தெருவில், அனுப்பாணடி அருகே சின்ன கண்மாய் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர் வீட்டு உபயோக கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் மொத்த கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து கடையின் உள்ளே சென்ற முருகவேல் கடையில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததோடு கல்லாப்பெட்டியில் இருந்த பணமும் திருடு போயிருந்தது.
இதனை அடுத்து முருகவேல் மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த நிலையில் நள்ளிரவில் கடையில் முன் வாசலை உடைத்துக் கொண்டு மர்ம நபர் கேமரா சிசிடிவி கேமரா வயர்களை அறுக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்