ராமேஸ்வரத்தில் வாரத்தின் ஏழு நாட்கலும் சுவாமி தரிசனம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்
வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் திருக்கோயில் தேவாலயம், மசூதி உள்ளிட்டவைகளில் ஆன்மீக தலங்களில் பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நேற்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு அறிவித்து அரசாணை வெளியிட்டது. அதில் வார விடுமுறை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்ததை நீக்கி வாரத்தில் ஏழு நாட்களும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து ராமேஸ்வரம் வந்திருந்த வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இன்று காலை முதல் ராமேஸ்வரம் திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, பின்னர் ராமேஸ்வரம் திருக்கோயில் நுழைவு வாயிலில் திருக்கோயில்; ஊழியர்களால் உடல் பரிசோதனை மற்றும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு முக கவசங்களுடன் கோவிலலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இதனையடுத்து கோயிலுக்குள் சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட தடை நீடித்து வருகிறது. எனவே தடையை நீக்கி பக்தர்கள் புனித நீராட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)