• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா

சேலம் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் பங்கேற்றார்.பெண்மையை போற்றும் விதமாகவும் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள அலுவலகத்தில் தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர் தொடர்ந்து அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து கேக் ஊட்டி உற்சாகமாக மகளிர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.