• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 7, 2023

சிந்தனைத்துளிகள்

ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள். யார் அந்த முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று. அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவன் மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை அடைந்தான்.
அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து,” என்னை யார் பின்னல் இருந்து குளத்தினுள் தள்ளியது?” என்று கேட்டான். கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்