• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பலரும் எதிர்ப்பு… மீண்டும் சென்ட்ரலில் ஒலிப்பெருக்கி!!

ByA.Tamilselvan

Mar 7, 2023

ஒலிப்பெருக்கி அறிவிப்பு முறையை ரத்து செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை சென்ட்ரலில் மீண்டும் ஒலிப்பெருக்கு அறிவிப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. அதே போல் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெயரையும் அது பெற்றுள்ளது. அண்மையில் அங்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டது. அதாவது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படாது. பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்ற குரலை இனி நாம் கேட் முடியாது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரிய அளவிலான டி.வி. ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில் ரயில்கள் புறப்படும் நேரம், வரும் நேரம் உள்ளிட்டவை ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நுழைவு வாயிலில் பிரெய்லி முறையிலான வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசி நேரத்தில் பயணிகள் ரயில் நிலையம் வந்தாலும், ஒலிப்பெருக்கியை பின்பற்றி நடைமேடைக்கு சென்றுவிடுவர், ஆனால், டிவியை பார்த்து நடைமேடைக்கு செல்ல தாமதம் ஏற்படலாம் என்று கூறினர். அதே போல் படிக்க முடியாது பயணிகளுக்கு அறிவிப்பை நிறுத்தவது பாதகமாக அமையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பழைய அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆடியோ அறிவிப்பு வசதி மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.