• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி

ByA.Tamilselvan

Mar 5, 2023

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது. சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.