• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நடிகரை அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை நேராபதேஹி

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் இந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் நோரா பதேஹி.
கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நோரா பதேகி. சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புகளை பெற்று வருகிறார்

இதுவரைபெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு நடனமாடி வரும் நோரா பதேகி ஏற்கனவே பாகுபலி, தோழா படங்களில் குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடியதன் மூலம் தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் ஐட்டம் சாங்காகூப்பிடு நோராவை என்ற அளவுக்கு பிரபலமானவர்

மோசடி வழக்கில் சிக்கியசுகேஷ் சந்திரசேகர், தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் பல நடிகைகள் விசாரிக்கப்பட்டனர் அந்தவழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட மற்றொரு நடிகை நோரா பதேகி என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால்இவர்விசாரிக்கப்பட்டார். அப்போது, தனக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என கூறியதுடன் சுகேசுடனான தனது வாட்ஸ்-அப் உரையாடல் பதிவுகளையும் விசாரணை அதிகாரிகளிடம்காண்பித்தார்.நடிகர்சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்ட இவர்ஆயுஷ்மான் குரானாவின் ஆக்க்ஷன் ஹீரோ படத்தை விளம்பரம் செய்யதி கபில் சர்மா நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு இறுதியில் நோரா பதேகி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சில கேள்விகளுக்கு கூறிய பதில் தற்போது விவாதமாக மாறிவருகிறது.கபில் சர்மா நிகழ்ச்சியில் நோரா பதேகி கூறியதாவது:-

என் முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்பொழுது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் கடுப்பாகி அவரை ஓங்கி அறைந்துவிட்டேன். உடனே பதிலுக்கு என்னை அறைந்தார். என்னை அறைந்ததுடன் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். நானும் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்தேன். அது ரொம்ப மோசமான சண்டையாக இருந்தது என்றார்.இப்படி ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டே கூறினார் நோரா பதேஹி. அதை கேட்ட கபில் சர்மாவோ, அந்த நடிகர் நிச்சயம் கஷ்டப்படுவார் என்றார். கண்டிப்பாக, அந்த நாய் என்று கூறினார் நோரா பதேகி. . பெரும்பாலும் பட வாய்ப்புகளுக்காக ஆண்களின்அத்துமீறலை கண்டும் காணாமலும், அதனை கண்டிக்காமலும் கடந்துபோகும் சினிமா நடிகைகள் புகழ் வெளிச்சத்திற்கு வந்த பின் பழைய பாலியல் சீண்டல்களை பகிரங்கமாக தொலைக்காட்சிபேட்டிகளில், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது பேஷனாகி வருகிறது