• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் காலை 10 மணி நிலவரப்படி

ByA.Tamilselvan

Mar 2, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து
வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
காலை 10 மணி நிலவரப்படி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 19,867,தென்னரசு 7,324,மேனகா நவநீதன் 1013,ஆனந்த் 157 வாக்குகள் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது