• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரண்மனைக்கு அணிவகுக்கும் நடிகைகள்

அரண்மனை4’ திரைப்படத்தில் நடிகை ராஷிகண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை’. ஹாரர் – காமெடி பாணியில் உருவான இப்படம் வணிக ரீதியாக திரையரங்குகளில் வசூலை குவித்தது இதன் காரணமாக படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாரிக்கப்பட்டு வெளியானது.கடைசியாக வெளியான அரண்மனை-3 வணிகரீதியாக திரையரங்குகளில் வசூலை குவிக்கவில்லை படத்தின் பிற உரிமைகளை வியாபாரம் செய்ததன் மூலம் தயாரிப்புக்கான அசலை தேற்ற முடிந்தது.அதனால் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வராது என கூறப்பட்டது லைகா தயாரிக்க உள்ள சங்கமித்ரா படத்தை இயக்கும் பணியில் சுந்தர்.சி பிசியானார்ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதல் அதற்குள்ளாக அரண்மனை – 4 இயக்கி முடித்துவிடலாம் என சுந்தர் – சி கூறியதால் அந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகைகள் தமன்னா, ராஷிகண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. இதில் ஏற்கெனவே, நடிகை ராஷிகண்ணா ’அரண்மனை3’-ல் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.