• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பிரபாஸ் – தீபிகா படுகோனேவின் நடிப்பில் ‘புராஜெக்ட் கே’

Byமதி

Oct 14, 2021

நடிகையர் திலகம் என்ற ஒற்றை திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், ’தேசிய விருது’ இயக்குநர் நாக் அஸ்வின். இதனைத் தொடர்ந்து அடுத்து இவர் எடுக்கப்போகும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.அந்தவகையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. புராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டுள்ள ’பிரபாஸ் 21’படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. பிரபாஸ் தற்போது ‘ராதே ஷ்யாம்’, ’சலார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் 500 கோடி என்றும் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு ஒரு வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.