• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புற்றுநோய் கட்டி சிகிச்சையில் மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை

Byகுமார்

Feb 19, 2023

வாலிபரின் உணவு பாதை புற்று நோய் கட்டிநுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மதுரை அப்போலோ டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரையில் அப்போலோ புற்று நோய் மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா பேசுகையில், 28 வயது வாலிபர் ஒருவர் உணவு விழுங்க முடியாமல் சிரமப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர் கள் பரிசோதனை செய்ததில் உணவு குழாயில் புற்றுநோய் இருப்பது கண்ட றியப்பட்டது. வி.ஏ.டி.எஸ். எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்தியல் துறை நிபு ணர் டாக்டர் தேவானந்த் பேசுகை யில், புற்று நோய் குறித்த பயமே நோயாளிகள் மருத்துவரை சரியான நேரத்தில் அணுகுவதற்கு தடையாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கண்ட றிந்தால் கீமோதெரபி எனப்படும் புற்றுநோய் மருந்துகளின் பலன் கூடு தலாக கிடைக்கும். பூரண குணம் அடைவதற்கான வாய்ப்புகளும் அதி கம் என்றார். இந்த வாலிபர் பூரண குணமடைய மும்முனை சிகிச்சை அளிப்பது அவசியம் என்று எங்கள் மருத்துவர் குழு ஆலோசனைக்குபின் முடிவு. செய்தது. அதன் காரணமாக 4 வாரங்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை அளிக் கப்பட்டது. அதற்கு பின்னர் நுண் துளை அறுவை சிகிச்சை செய்யப்பட் டது. இதனால் புற்று நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான மும்முனை சிகிச்சை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவத்துறை ஜே.டி.எம்.எஸ். டாக்டர் பிரவீன்ராஜன் கூறுகையில், உணவுக்குழாய் புற்றுநோய் என்பது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படுவ தில்லை இருப்பினும் நமது மருத்துவர் குழுவின் சிறப்பான சிகிச்சையால் இவர் தற்போதுகுணமடைந்துள்ளார். என்றார். அப்போலோ நிறுவனத்தின் மதுரை மண்டலசி ஓ ஓ நீலகண்ணன் பேசுகையில், மதுரை அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிநவீன கருவிகள் மூலம் நோயாளிகள் பயன டையும் வகையில் கொண்டு வரப்பட உள்ளன. இதனால்தென் தமிழக புற்று நோயாளிகள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை குறைந்த விலையில் பெற முடியும் என்றார். பேட்டியின்போது மருத்துவக்குழு நிபுணர்கள் ராஜேஷ் பிரபு, அய்யப்பன், கணேஷ், பிரவீன் குமார். பிரபு, மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் கே.மணிகண்டன், செயல்பாடுகள் பொது மேலாளர் நிக்கில் திவாரி மற்றும் பிரேம் டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.