• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

யானைகள் சேதப்படுத்திய தோட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?

காட்டு யானைகள் சேதப்படுத்திய விவசாயி தோட்டத்திர்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா என நீலகிரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பெரியார் நகர் மேல் குந்தா பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒற்றைக் காட்டு யானை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேரட் முட்டைகோஸ் காட்டு யானை மிதித்து கேரட்டுகளை ருசி பார்த்தும் விவசாயத் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலிகளையும் தண்ணீர் தொட்டிகளையும் தண்ணீர் பாய்ச்சும் கருவிகளையும் மிதித்து நாசம் செய்தது.

தோட்டத்தின் உரிமையாளர்கள் சேதமடைந்த தடுப்பு வேலைகளை மீண்டும் அமைத்து வருகின்றனர்கள்.காட்டு யானை மீண்டும் உள்ளே வராதவாறு தினந்தோறும் விவசாய நிலங்களில் தீ மூட்டி வருகின்றனர். இரவு பகலாக விவசாயிகள் யானை வருவதை கண்காணித்தும் வருகின்றனர்.யானையால் சேதமடைந்த காய்கறிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மீண்டும் விவசாய நிலங்களுக்கு யானை வராதவாறு கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.