• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின்இணைப்புக்கு லஞ்சம்வாங்கிய வணிக உதவியாளர் கைது

விவசாயிடம் மின்இணைப்புக்கு லஞ்சம்வாங்கிய உக்கரம் வணிக உதவியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் புதுத்தோட்டம் பகுதியில் சுப்பிரமணிய கவுண்டர் மகன் மூர்த்தி (50) வசித்து வருகிறார்.இந்த நிலையில் விவசாயி மூர்த்திதனது தோட்டத்தில் ஒரு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றை புதிதாக கட்டி வந்தார்.மேலும் புதிய கோழி பண்ணைக்கு மின் இணைப்பு வழங்க உக்கரம் இள மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.இது தொடர்பாக விவசாயி மூர்த்தி வணிக உதவியாளர் சுந்தரத்திடம் கோழிப்பண்ணைக்கு புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளேன் மின் இணைப்பு வழங்குமாறு கேட்ட பொழுது தனக்கு 3000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனே வழங்கப்படும் என்றார்.இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த விவசாயிமூர்த்தி ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல்அளித்தார்.
அதன்படி ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்ரேகா தலைமையிலான குழு ரகசியமாக மறைந்திருந்து விவசாயி மூர்த்தியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைவணிக உதவியாளருக்கு தரும்படி கூறினார்கள்.அவர் மின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்சுந்தரத்தை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்தாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளார்.
மேலும் சுந்தரம் 2014 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்து 2017ல் வணிக உதவியாளராக பதவி உயர்வு பெற்று உக்கரம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.