• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்து பெண்கள் பர்ஸில் கத்தி வைத்து கொள்ள வேண்டும் – சாத்வி பிராச்சி பேச்சால் பரபரப்பு

ByA.Tamilselvan

Feb 17, 2023

விஷ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி.) தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி அதிரடி கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். தற்போது இந்து பெண்கள் தங்கள் பர்ஸில் சீப்பு மற்றும் லிப்ஸ்டிக்கு பதிலாக கத்தி வைத்தக் கொள்ள வேண்டும் என்று சாத்வி பிராச்சி பேசியுள்ளார். மத்திய பிரதேசம் ரத்லமில் சாத்வி பிராச்சி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சாத்வி பிராச்சி பேசுகையில் கூறியதாவது: ஜிஹாதிகளை எதிர்த்து போராட இந்து பெண்கள் தங்கள் பர்ஸில் கத்தியை வைத்திருக்க வேண்டும், சீப் அல்லது உதட்டுச்சாயம் வைத்திருக்கக் கூடாது.முஸ்லிம்கள் தங்கள் மதத்திற்காக இருப்பது போல அனைத்து இந்திய இந்து பெண்களும் ஆச்சாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்து பெண்கள் பர்ஸில் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று சாத்தி பிராச்சி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.