• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேவாலா பகுதியில் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தேவாலா பகுதியில் நகராட்சி மூலம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்..
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா 12-ம் வார்டு பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் அவர்கள் வசியக்கூடிய பகுதியில் தண்ணீர் தொட்டியில் மேல்மூடி இல்லாத காரணத்தால் வனவிலங்குகள் மற்றும் எலிகள் மாடுகள் தண்ணீர் தொட்டிக்குள் விழும் நிலை உள்ள காரணத்தால் தண்ணீர் தொட்டிக்கு மேல் மூடி வேண்டும் என்றும்
இந்த நீரை குடிக்கின்ற மக்கள் அனைவருக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மேல் மூடி அமைத்து தரவேண்டும் என்றும்.. மின்சார இணைப்பு இல்லாத வீடுகள் உள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் இருக்கின்ற பகுதி என்பதாலும் இந்தப் பகுதியில் உள்ள மின் கம்பங்களுக்கு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும்….
இந்தப் பகுதியில் மயானத்திற்கு செல்லக்கூடிய சாலை சீரமைக்க வேண்டும் என்றும் நீண்ட கால கோரிக்கையாக உள்ள குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்றும்.. புதிதாக கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும் மேலும் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பரிசீலித்து நெல்லியாளம் நகராட்சி இரண்டு மாதத்திற்குள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்