• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிமீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்

Byதன பாலன்

Feb 11, 2023

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழியில் சிரிக்க வைக்கும் இவரது காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி. டாக்டர், அண்ணாத்தே, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜெண்ட் கண்ணாயிரம், காரி, கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் நிறைய படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ‘லெக்பீஸ்’ என்ற பெயரில் தயாராகும் படத்தை ஸ்ரீநாத் இயக்கி வருகிறார். இந்த படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடிக்க கிங்ஸ்லியை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.ஆனால் லெக்பீஸ் படத்தில் கிங்ஸ்லி சில நாட்கள் நடித்து விட்டு மீதி காட்சிகளில் நடிக்க மறுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், “லெக்பீஸ் படத்தில் 10 நாட்கள் நடிக்க சம்பளம் பேசி கிங்ஸ்லியை ஒப்பந்தம் செய்தோம். அவர் நான்கு நாட்கள் மட்டுமே நடித்தார். அதற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டார். மீதி நாட்கள் நடிக்க மறுத்து வருகிறார். எனவே அவருக்கு வழங்கிய சம்பளத்தையும் தயாரிப்பு செலவுக்கான நஷ்ட ஈடு தொகையையும் வாங்கி தரவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது