• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சாலையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து பறவைகளுக்கு தண்ணீர்

ByKalamegam Viswanathan

Feb 10, 2023

தற்போதைய நாகரிக வாழ்வில் நாம் கையில் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சாலையில் வீசிச்செல்வது நாகரீகமாகியுள்ளது.

அந்த நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் நசுங்கி மண்ணுக்கும் கீழ் சென்று
மக்கா குப்பையாகி மழைநீர் பூமிக்குள் செல்ல இயலாது மண் வளம் வீணாகிறது. இவ்வகை நெகிழி குடுவைகளை சேகரித்து இயற்கைக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தும் ஓர் முயற்சி கோடை காலங்களில் பறவைகளுக்கும், சிறு உயிரினங்களுக்கும் தண்ணீர் கிடைக்க செய்யும் நோக்கில் மரங்களில் பிளாஸ்டிக் குடுவைகளில் நீர் நிரப்பும் பணியினை துவங்கினேன்.

இந்த நற்செயலின் துவக்கமாக முதல் நெகிழி குடுவையினை எல்.கே.பி.நகர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐயா திரு தென்னவன் அவர்களது கரங்களால் காந்தி அருங்காட்சியகம் வளாகத்தில் மரங்களில் வைத்து துவக்கி வைத்தார்.இரண்டாவது குடுவையினை இளைய தலைமுறையான எல்.கே.பி.நகர் அரசு பள்ளியின் மாணவச்செல்வங்களின் கரங்களினால் வைக்கச்செய்தேன்.மனிதன் வாழ்வது கொஞ்ச காலம் மண்ணுக்கும், மனிதனுக்கு பயனுற்று வாழ்வோம். எனசமூக ஆர்வலர்
மக்கள் தொண்டன் க_அசோக்குமார் தெரிவித்தார்.