• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை பள்ளித்தம்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

ByKalamegam Viswanathan

Feb 10, 2023

சிவகங்கை மாவட்டம், பள்ளித்தம்பம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் 184 பயனாளிகளுக்கு ரூ.72.28 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார். அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.அதனடிப்படையில், இன்றையதினம் காளையார்கோவில் வட்டம், பள்ளித்தம்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இம்மக்கள் தொடர்பு முகாமினை, முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறயதினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, ஒன்றியக்குழுத் தலைவர் கோ.ராஜேஸ்வரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஸ்டெல்லா, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (பொ) பி.சாந்தி , இணை இயக்குநர்கள் ஆர்.தனபாலன் (வேளாண்மைத்துறை), மரு.நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை), துணை இயக்குநர்கள் (தோட்டக்கலைத்துறை) கு.அழகுமலை , (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன் உதவி ஆணையர் (கலால்) சி.ரத்தினவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேலு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் டி.கண்ணன், தாட்கோ மேலாளர் திருமதி ஜி.முத்துச்செல்வி மாவட்ட சமூகநல அலுவலர் ப.அன்பு குளோரியா பள்ளித்தம்பம்; ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகப்பிரியா, காளையார்கோவில் வட்டாட்சியர் பஞ்சவர்ணம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.