• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார்… ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Feb 5, 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய நடைமுறையில் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் பேசியதாவது..வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ் மகன் உசேன் அனுப்பியு கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோ அதை அவைத்தலைவர் நிராகரித்துள்ளார். அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்கள் அறிவித்த வேடப்ளர் தென்னரசு பெயரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறியிருப்பது சரியல்ல. வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்கையில், முன்கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால், அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர் தேர்வு கிடையாது, பொது வாக்கெடுப்பு முறையாகும். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சட்டவிரோத செயலுக்கு தங்களின் ஆதரவு இருக்காது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.