• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் அண்ணாமலை கோவிலில் தைப்பூச திருவிழா

நீலகிரி மாவட்டத்தின் பழனி என்று அழைக்கப்படும் அண்ணாமலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவகோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்த அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால் பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும்.

சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால்், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த ஓணிகண்டி அண்ணாமலை கோவிலில் காலை 8 மணியளவில் ஓம குண்டம் வார்க்கப்பட்டு மகா யாகம் நடத்தப்பட்டது அதைத் தொடர்ந்து 11 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் 108 பால்குடம் ஏந்தி வந்து முருகனுக்கு பல அபிஷேகம் நடைபெற்றது முருகனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களால் பஜனைகள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது மதியம் 12 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றன