• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கனமழை எதிரொலி..,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Byவிஷா

Feb 2, 2023

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூரில் காலை முதல் 2 முதல் 3 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப்ரவரி 2) விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (பிப்ரவரி 2) விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் இரவு முதலே மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.