• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பாஜகவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்-அண்ணாமலை

ByA.Tamilselvan

Feb 1, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை வெகு விரைவில் அறிவிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
அதிமுக இபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அக் கட்சியின் தலைவர் அண்ணாமலை பேசும் போது..ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பலமானவர். மக்களிடையே நன்கு அறிமுகமானவர் – இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை வெகு விரைவில் அறிவிப்போம். பேனா சிலை எதிர்ப்பு விவகாரத்தில் சீமானுடன் மட்டுமல்ல, தமிழர்களோடும் கை கோர்க்க தயார். இந்த பட்ஜெட், தமிழகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக இருக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.