• Sun. Nov 8th, 2026

அசோக்செல்வன், ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில்
அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் ,
கீர்த்திபாண்டியன்,திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் பெயரிடப்படாத புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.


இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது.
அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்தி.
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள்.