• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிப். 3-ல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல்..!!

ByA.Tamilselvan

Jan 29, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவன் பிப்.3ல் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அத்துடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.