• Wed. Mar 22nd, 2023

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு..!!

ByA.Tamilselvan

Jan 29, 2023

நாளை முதல் நடக்கவிருந்த வ ங்கி ஊழியர் வேலை நிறுத்தம் தள்ளிவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடுதழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. , வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் கடந்த 24-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில், மீண்டும் மும்பையில் தேஜ்பகதுர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:- பேச்சுவார்த்தையில், 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் கருத்துகளில் வேறுபாடு இருந்தபோதிலும், நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர். கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக, வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளார். எனவே நாளை நடக்க விருந்த வேலை நிறுத்தம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *