• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- சரத்குமார் அறிவிப்பு

ByA.Tamilselvan

Jan 25, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவுஇல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.