• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

27ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை

ByA.Tamilselvan

Jan 25, 2023

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தவிட்டுள்ளது.
திண்டுக்கல், பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.