• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா

Byp Kumar

Jan 14, 2023

மதுரை,தூய மரியன்னை மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளியின் முன்னாள் மாணவரும் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவருமான DR. பால்ராஜ் சொக்கப்பா நினைவாக மாணவர்களால் மாபெரும் அறிவியல் சிந்தனை பட்டிமன்றம் “இன்றைய அறிவியல் வளர்ச்சி மாணவர்களை பண்படுத்துகிறதா? பாழ்படுத்துகிறதா?” என்ற தலைப்பில் நடுவர் முனைவர்.மரியமோட்சராஜ் (எ) இனியவன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பள்ளி தாளாளர் அருள்தந்தை.ஸ்டீபன் லூர்து பிரகாசம் சே.ச. தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் அருள்தந்தை.சேவியர்ராஜ் சே.ச. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வினை அறிவியல் கழகம் சார்பாக பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.