• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புளியங்குடி அருகே வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை உயிர் இழப்பு

Byஜெபராஜ்

Jan 7, 2023

புளியங்குடி பீட் வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை இறந்து கிடந்தததை ஒட்டி வனதுறையினர் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தினர்
சங்கரன்கோவில் வனச்சரகம், புளியங்குடி பிரிவு, வனவர் .மகேந்திரன் தலைமையிலான குழு புளியங்குடி பிரிவு. புளியங்குடி பீட் பகுதியில் தணிக்கை செய்து வந்தனர். அப்போது குறிபிட்ட பகுதியில் யானைகள் கூட்டமாக பிளிருவதை அடுத்து அப்பகுதிக்கு சென்று பார்த்தனர் அங்கு ஒரு பெண்யானை[46] இறந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர்.கார்த்திகேயன், மாவட்டவன அலுவலர் மற்றும் வனஉயிரின காப்பாளர், முருகனுக்கு தகவல் தெரிவித்தனர் . மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் உதவி வனப்பாதுகாவலர் .ஷாநவாஸ்கான், உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) .பானுப்பிரியா, வனச்சரக அலுவலர் சங்கரன்கோவில் .கார்த்திகேயன், தன்னார்வத்தொண்டு நிறுவனர் .செல்வம் ராம்ராஜா, செழிம்புத்தோப்பு பளியாகுடியிருப்பு தலைவர் .செல்லையா ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் . முத்துகிருஷ்ணன். கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் தங்கதுரை, சிந்தாமணி கால்நடை உதனி மருத்துவர் டாக்டர். கருப்பையா. தென்மலை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர்.ரவிச்சந்திரன், வனக்கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, வனக்கால்நடை ஒட்டுநர் .கந்தசாமி, வனக்கால்நடை உதவியாளர் .லிங்கராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினருடன் சங்கரன்கோவில் வனச்சரக வனக்காப்பாளர்கள் .சன்னாசி, .முத்துப்பாண்டி, .ராஜீ மற்றும் வேட்டைத்தடுப்புக்காவலர்கள் .கருப்பசாமி. .அய்யாத்துரை மற்றும் .தாசன்ஆசிர்வாதம் ஆகியோர் கொண்ட குழுசம்பவ இடத்திற்கு விரைந்தது . அங்கு உடனடியாக பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். முடிவில் வயது முதிர்வால் ம் உடல்நல குறைவால் யானை இறந்தது என்றும் அதன் உடலில் வேறு காயங்களோ , எதுவும் இல்லை என உறுதி படுதப்பட்டது பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டது.