• Wed. Apr 24th, 2024

தூள் கிளப்பும் நெல்லை துணை ஆணையர்..!

Byத.வளவன்

Nov 9, 2022

தனது நேர்மையான, அதிரடியான, மற்றும் மனித நேய நடவடிக்கைகளால் நெல்லை
காவல்துறை துணை ஆணையர் மக்களின் அன்பிற்கு பாத்திரமாகத் திகழ்ந்து வருவதுதான் ஹைலைட்டே.
யார் அந்த காவல்துறை துணை ஆணையர்? என்பதை அறிய களத்தில் ஆஜரானோம்.
நெல்லை மாநகர காவல் துறையின் துணை ஆணையராக (கிழக்கு) பணியாற்றி வருபவர் தான் சீனிவாசன். 2005 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்சி குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று நேரடி டி.எஸ்.பி ஆக காவல்துறை வாழ்க்கையை துவக்கியவர். தஞ்சாவூர் டி.எஸ்.பி யாக தனது காவல் பணியை துவக்கிய இவர் தென்காசி, திருச்சி போன்ற ஊர்களில் திறமையான டி.எஸ்.பி என்ற பெயருடன் பணியாற்றியவர். ஏ.டி.எஸ்.பி யாக பணி உயர்வு பெற்று பணியாற்றிய ஊர்களிலும் தனது தனி முத்திரையை பதித்தவர். எஸ்.பி யாக பணி உயர்வு பெற்று அரியலூர் மாவட்ட எஸ்பியாக சிறப்பாக பணிபுரிந்து அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு நெல்லை துணை ஆணையராக பணியாற்றினார். இவர் நெல்லை துணை ஆணையராக பணியாற்றிய காலகட்டம் கொரோனா அலை உச்சத்தில் இருந்த காலகட்டம். கொரோனா காலகட்டத்தில் அரசு முழு ஊரடங்கை
அமல்படுத்தியது. நெல்லையில் முழு ஊரடங்கு காலகட்டத்தில் அரசு விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார். பின்னர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணி மாற்றம் பெற்றார். அதன் பிறகு திண்டுக்கல் எஸ்.பி ஆக பணியாற்றி விட்டு அங்கிருந்து பணி மாற்றம் பெற்று மீண்டும் திருநெல்வேலி துணை ஆணையர் (கிழக்கு) பதவியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
காவல்துறை பணி என்பது கடினமான பணி. சில நாட்களில் சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க முடியாத சூழல் கூட நிலவும். அப்படிப்பட்ட சூழலிலும் மிக உற்சாகமாக நேர்மையாக தனது பணியினை தொடர்ந்து செய்யும் அதிகாரிகளில் ஒருவராக திகழ்கிறார் துணை ஆணையர் சீனிவாசன். தனக்கு கீழ் பணி புரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் போன்றோரிடம் கண்டிப்பு காட்டும் அதே வேலையில் அவர்களை அழைத்து பாராட்ட இவர் என்றுமே தயங்கியது இல்லை. கடந்த ஜூலை மாதம் நெல்லை முருகன் குறிச்சி பகுதியில் சிசிடிவி கேமரா, மானிட்டர், ஒலிபெருக்கி, வசதியுடன் போலீஸ் பூத் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த போலீஸ் பூத்தினை திறந்து வைப்பதற்காக அங்கு வந்த துணை ஆணையர்
சீனிவாசன் அந்தப் பகுதியில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலர் ஒருவரை அழைத்து அந்த போலீஸ் பூத்தை திறந்து வைக்க சொன்னார். அதைப்போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இணைப்புடன் கண்ட்ரோல் ரூம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதனை திறக்க வந்த துணை ஆணையர் சீனிவாசன் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்களை வைத்து ரிப்பன் வெட்டி அந்த கண்ட்ரோல் ரூயஅp;மினை திறக்க வைத்தார். இவரது இந்த நிகழ்வுகள் அடிப்படை காவலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இவருடைய பணி எல்கைக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, பெருமாள்புரம், மேலப்பாளையம், ஹை கிரவுண்ட் போன்ற காவல் நிலைய எல்லைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முழுமையாக கண்காணித்து கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் தடை செய்யப்பட்ட
போதைப் பொருள்கள் விற்பவர்கள் பலர் வேறு வழியின்றி வேறு தொழிலுக்கு மாறி
விட்டனர். நெல்லையின் பிரதான பகுதியான வண்ணாரப்பேட்டை வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் நிறைந்த பகுதியாகும். கடந்த தீபாவளி பண்டிகையின் போது இப்பகுதியில் முழு பாதுகாப்பினை ஏற்படுத்தி எந்த அசம்பாவிதமோரூபவ் களவோ நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாராட்டினை பெற்றார்.
பள்ளி, கல்லூரிகளில் சென்று போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ,
மாணவிகளிடம் உரையாடி அவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி வருகிறார்.
சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு பள்ளிரூபவ் கல்லூரி
மாணவர்கள் மத்தியில் உரையாடி அவர்களை வாழ்க்கையில் எந்த சூழலிலும் லஞ்சம்,
கொடுக்கவோ வாங்கவோ மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்தது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
இரவு நேரங்களில் சில நேரம் மிதி வண்டியில் ரோந்து சென்று இரவு நேர காவல்
பணியில் ரூடவ்டுபட்டுள்ளவர்களை தணிக்கை செய்து அவர்களுக்கு அறிவுரை கூறி உற்சாகப்படுத்தி வருகிறார். மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி கேமராக்களை தன்னுடைய பணி எல்கையில் மிக அதிக அளவில் நிறுவிட தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

நெல்லை மக்களின் அன்பைப் பெற்றுரூபவ் சமூகவிரோதிகளின் வெறுப்பினை பெற்று,
பணியில் தூள் கிளப்பி வரும் துணை ஆணையரை நமது அரசியல் டுடே மனதார வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *