• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

ByA.Tamilselvan

Jan 6, 2023

சட்டை பட்டன்களில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விமான நிலையம் வந்த பயணிகளில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணியை சோதனை செய்தபோது சூட்கேஸ் கோப்புகளின் அட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.31.29 கோடி மதிப்புள்ள 4.47 கிலோ ஹெராயின் மற்றும் சட்டை பட்டன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட ரூ.15.96 கோடி மதிப்புள்ள 1.596 கிலோ கொக்கைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
போதை பொருளை கடத்தி வந்த பயணி மீது சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.