• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கூடலூர் பந்தலூர் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணியிட மாறுதலை திரும்ப பெறகோரி கூடலூர் பந்தலூர் விஏ.ஓக்கள் உள்ளிருப்புபோராடம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்டம் கூக்கல்தொரை அருகிலுள்ள உயிலட்டி பகுதியில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சாலையின் குறிக்கே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது.இதை அறிந்த கூக்கல்தொரை கிராம நிர்வாக அலுவலர் சாம்சன் கலெக்டர், ஆர்டிஓ,வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை உடனடியாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தாமதமாக தகவல் தெரிவித்ததாக கூறி கூக்கல்தொரை கிராம நிர்வாக அலுவலர் சாம்சணை குந்தா வட்டத்திற்குட்பட்ட மேல் குந்தாவிற்கு பணியிட மாற்றம் செய்து ஊட்டி ஆர்டிஓ துரைசாமி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்டிஓ தொடர்ந்து வருவாய் துறை ஊழியர்களை பழிவாங்கும் செயலில் ஈபடுவதாக கூறி இன்று கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூக்கல்தொரை கிராம நிர்வாக அலுவலரை பணியிடை மாற்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பியும் பணியிட மாற்றத்தை திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.