• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

ByA.Tamilselvan

Dec 28, 2022

பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் விரைவில் குணமடைய வேண்டும் என ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். தாயாரின் நலம் விசாரிக்க பிரதமர் மோடி குஜராத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், தாய்க்கும் மகனுக்கும் இடையிலான அன்பு முடிவில்லாததுமற்றும் விலைமதிப்பற்றது. அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.