• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொடரும் ஆபத்தான பயணம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருட்கள் மற்ற பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் பிக்கப் வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பிக்கப் வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்று நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.

கடந்த ஆண்டு பிக்கட்டி கேரப்பாடு பகுதியில் 500 அடி பள்ளத்தில் பிக்கப் வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விபத்துக்குள்ளானார்கள் இதில் ஒருவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றார் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் பிக்கப் வாகன பயணத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் விபரீதத்தை அறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.