• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த
தெரியாமல் தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர்

உத்தரப் பிரதேசத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்த் கபீர் நகர் மாவட்டம் கலிலாபாத் காவல் நிலையத்தில் ஐ.ஜி ஆர்.கே. பரத்வாஜ் திடீர் ஆய்வுக்குச் சென்றார். அப்போது அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி காட்டுமாறு கூறினார். அப்போது அவர் துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த முடியாமல் தடுமாறினார். தோட்டா வெளியேறும் குழாய் வழியாக தோட்டாவை பொருத்த முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், பல போலீஸ்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த முடியாமல் தோல்வியடைந்தனர். புறக்காவல் பொறுப்பு அதிகாரி, கண்ணீர் துப்பாக்கியை பலமுறை முயற்சி செய்தும் அவரால் இயக்க முடியவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எந்த நேரமும் அவசரநிலை உருவாகலாம் என்பதால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுமாறு போலீசாருக்கு ஐ.ஜி அறிவுறுத்தினார்.