• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஈரோடு மாவட்ட டென்னிஸ்- கிரிக்கெட் அசோசியேசன் உருவாக்கம்

ஈரோடு மாவட்ட டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் அசோசியேசன் உருவாக்கப்பட்டு அதன் .தலைவராக டாக்டர் அரவிந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் டென்னிஸ் கிரிக்கெட் அசோசியேசன் உருவாக்கம் விழா நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு டென்னிஸ், கிரிக்கெட் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது அதில் நம்பியூர் குமுதா பள்ளி செயலாளரும் டாக்டருமான அரவிந்தன் ஈரோடு மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து செயலாளராக பிரபு, பொருளாளராக பாலபிரபு ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து மாநிலத் தலைவர் கண்ணன் பேசிய போது ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் டென்னிஸ் கிரிக்கெட் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்திய அளவிலும் உலக அளவில் பிரபலமடைந்து வரும் டென்னிஸ், கிரிக்கெட் விளையாட்டு நமது பகுதிகளில் உள்ள இளைஞர்கள் விளையாடி அதன் மூலம் ஒரு உயர் பதவியை அடையலாம் எனக் கூறினார்.நிகழ்ச்சியில் டென்னிஸ் கிரிக்கெட் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜேஷ், கோவை மண்டல செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஈரோடு மாவட்ட டென்னிஸ் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.