• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிக்கெட்டியில் 25 ஆம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பிக்கெட்டி பஜார் சக்தி விநாயகர் திடலில் அலங்கார பந்தலில் 25ஆம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் விளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 6:00 மணி கணபதி பூஜையுடன்துவங்கப்பட்ட ஐயப்ப விளக்கு பூஜை சிங்காரி மேளம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது

. அதனை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் மகா அன்னதானம் நடைபெற்றது.பக்தர்கள் பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து சிவசக்தி மாரியம்மன் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்டு இருந்த புலி வாகனத்துடன் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் விளக்கேந்தி மூன்று கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக ஸ்ரீ சக்தி விநாயகர் திடலில் வந்தடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்