• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

   விழாவை முன்னிட்டு நேற்று காலை வீர ஆஞ்சநேயருக்கு பால், பழம் தயிர், தேன், இளநீர், பன்னீர், பழ வகைகள் திருநீறு உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் ஆராதனை பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது . அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி ,செந்தூரம் ,லட்டு, கேசரி, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

   மாலையில் ஆஞ்சநேயர் புஷ்ப அலங்காரத்துடன்  வெண்ணை காப்பு சாத்தப்பட்டு ,ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவகிரக தோஷங்கள் நீங்கி தடைகளை உடைத்து எரிந்து ,சோதனைகளை சாதனையாக்கி , கலியுகத்தில் தீய சக்திகளை அழித்து தருமத்தை காத்து அருள்பாலிக்கும் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.