• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்

வாகராயம்பாளையத்தில் நடைபெற்ற போதைபொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பேரூராட்சி தலைவர் உயிர் கே.பி.சசிக்குமார் பங்கேற்பு
மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வாகராயம்பாளையத்தில் மாபெரும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர், இளைஞர்கள், பெண்கள், பெரியோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் இந்நிகழ்வில் வாகை ரோட்டரி சங்கம் சார்பாக சுமார் 500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.


    மோப்பிரிபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் உயிர் கே.பி.சசிக்குமார் பேசுகையில், சிறப்பாக நடைபெற உதவியாக இருந்த மட்சுஷிமா கியோகுஷின் கராத்தே அமைப்பு, வாகை ரோட்டரி சங்கம் மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், உயிர் சமூக சேவை மைய உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என பேசினார்.