• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்கிறார்கள்- ராகுல்காந்தி

ByA.Tamilselvan

Dec 20, 2022

இந்திக்கு ஆதரவாக பேசும் அமித்ஷா முதல் பா.ஜனதா முதல்-மந்திரிகள், எம்.பி-எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் படிக்கிறார்கள் ராகுல்காந்தி குற்றச்சாட்டு.
ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று அல்வாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ….. ‘பா.ஜனதாவில் எங்களை எதிர்க்கும் தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள். பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள். பெங்காலி இருக்கலாம், இந்தி இருக்கலாம், ஆனால் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்’ என குற்றம் சாட்டினார். இந்த தலைவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? என கேட்டுப்பாருங்கள் எனக்கூறிய ராகுல் காந்தி, அமித்ஷா முதல் பா.ஜனதா முதல்-மந்திரிகள், எம்.பி-எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் படிப்பதாகவும், அவர்கள் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டும் என அந்த தலைவர்கள் விரும்புவதாகவும் சாடினார். மேலும் அவர், ‘மாணவர்கள் இந்தி படிக்க வேண்டாம் என நான் கூறவில்லை. நீங்கள் இந்தி, தமிழ் என அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். எனவே ஏழைகளின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்று அமெரிக்கா சென்று அங்குள்ளவர்களுடன் போட்டிபோட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றும் தெரிவித்தார்.