முதலமைச்சருக்கு உரிய பங்கு செல்லாததால் தான் வனத்துறை அமைச்சராக இருந்த கா.ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி உதகையில் பேட்டி…
உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் கேத்தி பேரூராட்சி அதிமுக கழகம் சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்தாத ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உரிய பங்கு போய் சேராததன் காரணமாகத்தான் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதேபோல் பல்வேறு அமைச்சர்களை மாற்றியதற்கும் காரணம் என கூறிய அவர்,விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறைக்காக என்ன செய்திருக்கிறார், தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் ஏன் ?அதிமுக செய்தி தொடர்பாளர் அதிரடி பேட்டி













; ?>)
; ?>)
; ?>)