• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தயாராகும் புதிய அறை?

ByA.Tamilselvan

Dec 12, 2022

திமுக இளைஞர் அணி செயலாளராகவும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதிஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பார் என்றும் தலைமை செயலகத்தில் அவருக்கான புதிய அறை முழு வீச்சில் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.


இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் அமைச்சராக பதவியேற்கும் உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் முழு வீச்சில் புதிய அறை தயாராகி வருவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.