• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உதகையில் மரம் முறிந்து விழுந்ததால்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

உதகையில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக பிரிக்ஸ் பள்ளி சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கமர்சியல் சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் பிரிக்ஸ் பள்ளி எதிரே மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்களை வேறு வழியில் மாற்றப்பட்டது.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயனைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.